PUBLISHED ON : ஜூன் 01, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: அய்யங்கோட்டையில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் சாஸ்தா அய்யனார் கோயில் உள்ளது.
இக்கோயில் முன் உள்ள குளம் பராமரிப்பின்றி தண்ணீரில் மிதந்த பிளாஸ்டில் குப்பை கழிவுகளால் சுகாதார கேடாக காட்சியளித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கோயில் நிர்வாக அலுவலர் கார்த்திகை செல்வி தலைமையில் ஊழியர்கள் குளத்தை சுத்தம் செய்தனர்.