/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
புதிய மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு கால அவகாசம்; தினமலர் செய்தி எதிரொலி
/
புதிய மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு கால அவகாசம்; தினமலர் செய்தி எதிரொலி
புதிய மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு கால அவகாசம்; தினமலர் செய்தி எதிரொலி
புதிய மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு கால அவகாசம்; தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஏப் 05, 2024 12:00 AM

மதுரை : தினமலர் செய்தி எதிரொலியால் 2021 - 2041க்கான உள்ளூர் திட்ட குழுமத்தின் புதிய மாஸ்டர் பிளான் வரைவு நில வகைபாட்டுக்கான அவகாசம் ஏப்.7ல் இருந்து மே 10 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளுக்காக ஏற்கனவே நில வகைபாட்டில் இருந்த நிலங்கள் புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தில் விவசாய நிலங்களாகவும் வீட்டு உபயோக நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இதனால் தொழில் செய்து வரும் நிறுவனங்களின் எதிர்கால நில விஸ்தரிப்பு திட்டம் முடக்கப்படும். மேலும் தொழில் செய்வோரால் விவசாயிகள், குடியிருப்போருக்கு சிக்கல் ஏற்படும். பழைய திட்டத்தில் தொழிற்சாலை நில வகைப்பாட்டில் இருந்த நிலங்களை மீட்பதற்கு தொழிற்துறையினருக்கு கால அவகாசம் தேவை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மே 10 வரை தமிழக அரசு கால நீட்டிப்பு செய்துள்ளது.
மடீட்சியா தலைவர் லட்சுமிநாராயணன் கூறியதாவது: மே 10 வரையான கால நீட்டிப்பை வரவேற்கிறோம். தொழிற்சாலை உரிமையாளர்கள் நில வகை மாற்றம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு மடீட்சியாவை அணுகலாம். நிலவகைப்பாட்டின் தற்போதைய நிலை அறிந்து இலவச உதவி செய்யப்படும்.
ஆன்லைன் போர்ட்டலில் நில உரிமையாளர் பற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்தும் மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரில் கொடுத்து உதவ தயாராக உள்ளோம் என்றார்.

