/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
மயான சுற்றுச்சுவர் மண் அரிப்பு சீரமைப்பு: 'தினமலர்' செய்தி எதிரொலி
/
மயான சுற்றுச்சுவர் மண் அரிப்பு சீரமைப்பு: 'தினமலர்' செய்தி எதிரொலி
மயான சுற்றுச்சுவர் மண் அரிப்பு சீரமைப்பு: 'தினமலர்' செய்தி எதிரொலி
மயான சுற்றுச்சுவர் மண் அரிப்பு சீரமைப்பு: 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி மயானம் சுற்றுச்சுவர் பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டிக்கு உட்பட்ட மயானத்தில், ஆதிதிராவிட நிதியிலிருந்து, 11.35 லட்சம் மதிப்பீட்டில், மயானத்தின் எரிமேடை, கான்கிரீட் தளம் மற்றும் சுற்றுச்சுவர் கடந்த 2024ல் அமைக்கப்பட்டது.
இந்த மயானத்தின் சுற்றுச்சுவர் நீரோடை அருகாமையில் கட்டப்பட்டுள்ளது. பருவமழையால், இந்த சுற்றுச்சுவரின் அடியில் நீரோடைக்குச் மழை நீர் வழிந்தோடி மண் அரிப்பு ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக மயான சுற்று சுவரில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக மண் கொட்டி சீரமைக்கப்பட்டது.