/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ரயில்வே மேம்பால பள்ளம் சீரமைப்பு
/
ரயில்வே மேம்பால பள்ளம் சீரமைப்பு
PUBLISHED ON : நவ 04, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்:
'தினமலர்' செய்தி எதிரொலியால் பெ.பொன்னேரி ர யில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சீரமைத்தனர்.
விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கானோர் செல்கின்றன. பராமரிப்பின்றி உள்ள மேம்பால தரைத்தளத்தில் பல இடங்களில் கான்கிரீட் சிமென்ட் காரைகள் பெயர்ந்து மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இதனை சுட்டிக்காட்டி நேற்று 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் பள்ளத்தை சீரமைத்தனர்.

