/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
மதுராந்தகம் தற்காலிக பஸ் நிலையத்தில் கூடுதல் கழிப்பறை கட்டும் பணி துவக்கம்

PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், பயணியரின் நலன் கருதி, கூடுதல் கழிப்பறைகள் மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மதுராந்தகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ் 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன.
மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சூனாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் 5,000க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
மழை மற்றும் வெயில் காலங்களில் இருந்து பயணியரை பாதுகாக்கும் வகையில், தற்காலிக பயன்பாட்டிற்காக, நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
பயணியரின் நலன் கருதி கூடுதலாக நிழற்குடை, கழிப்பறை மற்றும் பேருந்து நிலையத்தில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க கோரி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, நகராட்சி பொது நிதியிலிருந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் கூடுதல் கழிப்பறை, மின்விளக்குகள், பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகின்றன.