/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி --- கான்வென்ட் தெருவுக்கு பெயர் பலகை அமைப்பு

PUBLISHED ON : ஆக 15, 2025 12:00 AM

டி.பி.,சத்திரம் நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, டி.பி.,சத்திரம் பகுதியில், கான்வென்ட் தெருவுக்கு புதிதாக பெயர் பலகை அமைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்களின் பெயர், முகவரி, வார்டு எண், மண்டலம் உள்ளிட்ட விபரங்களை, பொதுமக்கள் அறிவதற்கு வசதியாக, பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான இடங்களில் மாநகராட்சி பெயர் பலகைகள் இல்லாததால் முகவரி தேடுவோர் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, 100வது வார்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, டி.பி.,சத்திரத்தில், கான்வென்ட் சாலை, உள்ளது. இச்சாலையை கடந்து தான், கீழ்ப்பாக்கம், டி.பி., சத்திரம், சந்தாமணி, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லல முடியும்.
இப்பகுதியில் பல ஆண்டுகளாகவே பெயர் மற்றும் வழிகாட்டி பலகை இல்லாததால், முகவரி தேடுவோர் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் இத்தெருக்கு புதிய பெயர் பலகை அமைக்கப்பட்டது.