/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி மாமல்லை சந்திப்புகளில் புதிதாக சிக்னல் அமைப்பு

PUBLISHED ON : டிச 07, 2024 12:00 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், நெடுஞ்சாலைத் துறையின் கீழ், கிழக்கு ராஜ வீதி, கடற்கரை சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட போக்குவரத்து சாலைகள் உள்ளன.
உள்ளூர், சுற்றுலா வாகனங்கள் இச்சாலைகளை பயன்படுத்தி வருகின்றன. வார இறுதி நாள், அரசு விடுமுறை, பண்டிகை ஆகிய நாட்களில், சுற்றுலா வாகனங்கள் படையெடுக்கின்றன.
பேருந்து நிலையம், கங்கைகொண்டான் மண்டபம், பஜனை கோவில் ஆகிய சந்திப்பு பகுதிகளில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை அலட்சியப்படுத்தி, தாறுமாறாக கடக்கின்றனர்.
சுற்றுலா பயணியர், வாகனங்களை கட்டுப்பாடின்றி ஓட்டி, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து போலீசார், சந்திப்பு பகுதிகளில் தற்போது போக்குவரத்து,'சிக்னல்'கள் அமைத்து உள்ளனர்.