/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி கழிவுநீர் அகற்றம்
/
தினமலர் செய்தி எதிரொலி கழிவுநீர் அகற்றம்
PUBLISHED ON : நவ 26, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள மேட்டு தெருவில் நகராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ரோட்டை தோண்டிய நிலையில் மீண்டும் ரோடு அமைக்காததால் அப்பகுதியில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் தேங்கியிருந்த நீரை அகற்றினர்.
இடைக்காட்டு சர்ச் முன் கடந்த 10 மாதங்களாக உயர் மின் கோபுர விளக்கு எரியாமல் இருப்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து அதனை மீண்டும் எரிய வைக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

