/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
திருப்போரூர் தாலுகா அலுவலக கழிப்பறை 'பளீச்'
/
திருப்போரூர் தாலுகா அலுவலக கழிப்பறை 'பளீச்'
PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, திருப்போரூர் தாலுகா அலுவலக பொது கழிப்பறை துாய்மை படுத்தப்பட்டது.
திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு, ஆதார், இ-- சேவை மையம், நில அளவை பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, பதிவறை, தேர்தல் பிரிவு உள்ளிட்டவை உள்ளன. திருப்போரூர் தாலுக்கா அலுவலகத்திற்கு 80க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள பொது கழிப்பறை முறையான பராமரிப்பில்லாமல் இருந்தது. இதை பயன்படுத்தும் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழிலில் செய்தி வெளியானது.
இதையடுத்து, தற்போது கழிப்பறை துாய்மை படுத்தப்பட்டது