/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி தண்டரை ஏரியின் மதகு தற்காலிகமாக சீரமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி தண்டரை ஏரியின் மதகு தற்காலிகமாக சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி தண்டரை ஏரியின் மதகு தற்காலிகமாக சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி தண்டரை ஏரியின் மதகு தற்காலிகமாக சீரமைப்பு
PUBLISHED ON : ஜன 02, 2025 12:00 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த தண்டரை கிராமத்தில், 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட, பழமை வாய்ந்த பல்லவன் குளம் ஏரி உள்ளது.
இது, பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
மதுராந்தகம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், கிளியாற்றின் வழியாக பல்லவன்குளம் ஏரிக்கு வந்தடைகிறது.
ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், தனித்தனியே மதகுகள் வாயிலாக புறஞ்சேரி, பொய்கைநல்லுார், தண்டரை, செம்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் பாய்கிறது.
இந்நிலையில், தண்டரை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள மதகு பகுதி சேதமடைந்து, ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர், நெல் பயிரிடப்பட்டுள்ள வயல்வெளிகளில் அதிக அளவில் தேங்குவதால், பயிர்கள் அழுகி நாசமடைந்தன.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து பொதுப்பணித் துறையினர், மரக்கட்டைகள் கட்டி மணல் மூட்டைகள் அடுக்கி, மதகு பகுதியை தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.
தண்டரை மதகு பகுதியை முழுமையாக சீரமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நிர்வாக அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு செய்தவுடன், புதிய மதகு அமைக்கும் பணி நடைபெறும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

