/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி வாலாஜாபாத் ரவுண்டனா சாலை பள்ளங்கள் சீரமைப்பு

PUBLISHED ON : நவ 14, 2024 12:00 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ரவுண்டனா பகுதியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் பாலாற்று வழியாக கிராமங்களுக்கு செல்லும் சாலையென 4 வழிகளுக்காான சாலை பிரிகிறது. ஏராளமான பயணியர் இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
வாலாஜாபாத் ரவுண்டனா பேருந்து நிலையத்தின் காஞ்சிபுரம்- செங்கல்பட்டுக்கான சாலையில்,
அடுத்தடுத்து இரு இடங்களில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது.
இதனால், பள்ளத்தை தவிர்த்து வாகனங்களை இயக்கும் போது, எதிரே வரும் வாகனங்களோடு விபத்திற்குள்ளாகும் நிலை இருந்தது.
மழை நேரங்களில், பள்ளத்தில் மழைநீர் தேங்கி சேறாகி வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
எனவே, இப்பகுதியில் ஏற்பட்டுள்ள சாலை பள்ளங்களை சீரமைக்க வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து, கடந்த 12ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பள்ளங்களில் ஜல்லி கற்கள் பதித்து சீரமைக்கப்பட்டது.