PUBLISHED ON : மார் 15, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி தேவர் சிலை முதல் மொட்டமலை கலைஞர் நகர் வரையுள்ள மெயின் ரோடு கலெக்டர் சிறப்பு நிதி மூலம் சீரமைக்க ரோடு தோண்டப்பட்டு 2 மாதங்களாகியும் அடுத்தகட்ட பணிகள் நடக்கவில்லை.
வைகை கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்களும் பதிக்கப்படவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன்எதிரொலியாக ரோடு சீரமைக்கும் பணி துவங்கியது.

