PUBLISHED ON : ஏப் 10, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் நான்கு வழி சாலை சந்திப்பில் சாலையின் ஓரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது.
சாத்துார் படந்தால் ஜங்ஷன் நான்கு வழிச்சாலையில் மேற்கு பகுதியில் பயணிகள் நிழற்குடை அருகே பல நாட்களாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. தற்போது கோடை மழை சூறாவளி காற்றுடன் பெய்து வருவதால் பலத்த காற்று வீசும் போது பேனர்கள் சாய்ந்து இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை தினமலர் நாளிதழ் படத்துடன் சுட்டிக்காட்டியது.
இதனைத் தொடர்ந்து சாத்துார் போலீசார் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றினர்.

