/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
இடும்பன் குளம், சண்முக நதியை சுத்தம் செய்த கோயில் ஊழியர்கள்
/
இடும்பன் குளம், சண்முக நதியை சுத்தம் செய்த கோயில் ஊழியர்கள்
இடும்பன் குளம், சண்முக நதியை சுத்தம் செய்த கோயில் ஊழியர்கள்
இடும்பன் குளம், சண்முக நதியை சுத்தம் செய்த கோயில் ஊழியர்கள்
PUBLISHED ON : ஜன 03, 2026 06:02 AM

பழநி: பழநி பாதயாத்திரை பக்தர்கள் நீராடும் புனித நீர்நிலைகளான இடுமபன்குளம், சண்முக நதி பகுதிகள் மாசடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வந்த நிலையில் அவற்றை தூய்மைப்படுத்தும் பணியை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிகின்றனர். பக்தர்கள் இடும்பன் குளம், புனித நதியான சண்முக நதியில் நீராடி பிறகு முருகன் கோவிலுக்கு வருகை புரிவர்.
2025 டிச.29ல் அமலைச் செடிகளால் மாசடைந்து உள்ள சண்முக நதி குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
ஜன.1ல் மாசடைந்துள்ள இடும்பன் குளம் குறித்தும் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து பழநி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் சண்முக நதியில் அமலை செடிகளை தன்னார்வலர்கள், கோயில் ஊழியர்கள் மூலம் அகற்றும் பணியை துவங்கியது.
இடும்பன் குளத்தில் இருந்த குப்பையும் கோயில் ஊழியர்களால் அகற்றப் பட்டன.