/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சத்திரக்குடியில் முறைப்படுத்தப்பட்ட வாரச்சந்தையால் வியாபாரிகள் நிம்மதி: தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : டிச 23, 2025 05:32 AM

சத்திரக்குடி: பரமக்குடி அருகே சத்திரக்குடி வாரச்சந்தை ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வந்த நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி மற்றும் போலீசார் நடவடிக்கையால் சந்தைக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டதால் வியாபாரிகள், மக்கள் நிம்மதியடைந்தனர்.
போகலுார் ஒன்றியம் சத்திரக்குடி பகுதியில் வாரந்தோறும் திங்கள்கிழமை சந்தை செயல்படுகிறது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சந்தைக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே கடைகள் விரிக்கப்பட்டன.
தொடர்ந்து போக்குவரத்து நெரிசலால் விபத்து அபாயம் குறித்து நாளிதழில் சுட்டிக்காட்டிய நிலையில் டிச., 16ல் போலீசார், வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்ட தீர்மானத்தின் படி நேற்று நடந்த வார சந்தை முறைப்படுத்தப்பட்டு அனைத்து கடைகளும் சந்தைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் செயல்படத் துவங்கியது. டூவீலர்களும் முறையாக ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் வாரத்தின் முதல் வேலை நாளில் பள்ளி வேன்கள், வேலைக்கு செல்வோர் என நிம்மதி அடைந்தனர்.
தொடர்ந்து வரும் வாரங்களில் இதே போல் சந்தை செயல்பட வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.