தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/செய்தி எதிரொலி/தினமலர் செய்தி எதிரொலி :ஆழங்கால் துார்வாரும் பணி துவக்கம்

தினமலர் செய்தி எதிரொலி :ஆழங்கால் துார்வாரும் பணி துவக்கம்

தினமலர் செய்தி எதிரொலி :ஆழங்கால் துார்வாரும் பணி துவக்கம்


PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 'தினமலர் செய்தி' எதிரொலியாக ஆழங்கால் வாய்க்கால் துார்வாரும் பணி நடந்தது.

விழுப்புரம் அருகே எல்லீஸ் அணைக்கட்டு பகுதியிலிருந்து, விழுப்புரம் வழியாக ஆழங்கால் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. பிடாகம், அத்தியூர், கண்டமானடி, கொளத்துார், ஆனாங்கூர், பில்லுார் வழியாக செல்லும் இந்த ஆழங்கால் வாய்க்கால், வளவனுார் ஏரிக்கு செல்கிறது.

மழைக்காலங்களில் வெள்ள நீரை ஏரிகளில் சேமிக்க முடியாமல் போவதாக, குற்றம் சாட்டும் விவசாயிகள், ஆழங்கால் வாய்க்காலை துார்வாரி சீரமைக்க கோரி வருகின்றனர். இது குறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதனையடுத்து, பருவமழைக்கால முன்னேற்பாடு பணியின் கீழ், விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் பகுதியிலிருந்து, ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் ஆழங்கால் வாய்க்கால் துார்வாரும் பணி நேற்று துவங்கியது. இப்பணியை கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் பார்வையிட்டார். நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us