/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பேட்டரி வாகனங்களுக்கு விடிவு: தினமலர் செய்தி எதிரொலி
/
பேட்டரி வாகனங்களுக்கு விடிவு: தினமலர் செய்தி எதிரொலி
பேட்டரி வாகனங்களுக்கு விடிவு: தினமலர் செய்தி எதிரொலி
பேட்டரி வாகனங்களுக்கு விடிவு: தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : அக் 31, 2025 12:00 AM

அன்னுார்:  இரண்டு மாதங்களாக மு டங்கி கிடந்த பேட்டரி வாகனங்களுக்கு 'தினமலர் செய்தி எதிரொலியாக விடிவு காலம் பிறந்தது.
அன்னுார் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 150 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம் தேவைப்படுகிறது. ஆனால் 400 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம் தான் உள்ளது. எனவே, கூடுதலாக ஏழு ஊராட்சிகளுக்கு 9 பேட்டரி வாகனங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்டன.
அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் முடங்கி கிடந்தன. இதுகுறித்து கடந்த 28ம் தேதி தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து அந்த பேட்டரி வாகனங்கள் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு எண் பெற நேற்று கொண்டு செல்லப்பட்டன.
பதிவெண் பெற்றவுடன் அவை சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் செய்தி எதிரொலியாக இரண்டு மாதங்களாக முடங்கிக் கிடந்த பேட்டரி வாகனங்களுக்கு விடிவு பிறந்துள்ளது.

