/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு
/
தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு
PUBLISHED ON : நவ 27, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: நாவினிபட்டி மாநில நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் முழுவதும் பழுதானதால் நெடுஞ்சாலை இருளில் மூழ்கியது. அதனால் விபத்து, சமூக விரோத செயல் களால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மேலும் அத்தியா வசிய தேவை, படிப்பு, வேலைக்கு செல்வோர் அச்சத்துடனே வீடு திரும்பினர். இதுபற்றி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து உடனே நடவடிக்கை மேற்கொண்ட நெடுஞ் சாலைத்துறை உதவிப் பொறியாளர் கிஷோர், தெரு விளக்குகள் அனைத்தை யும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதனால் நாவினிப்பட்டி முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது.
அப்பகுதி மக்கள் தினமலர் நாளிதழ், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

