/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி: கிடைத்தது யூரியா
/
தினமலர் செய்தி: கிடைத்தது யூரியா
PUBLISHED ON : நவ 21, 2025 03:54 AM
சோழவந்தான் நவ.21--: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் சுற்றுவட்டாரத்தில் யூரியா தட்டுப்பாடு நிலவியது. திருமங்கலம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பலநுாறு ஏக்கர் நிலங்களில் சாகுபடி பணிகள் தொடங்கின.
நடவு செய்து 15 முதல் 20 நாட்களுக்குள் யூரியா உரமிட வேண்டும். இந்நிலையில் சொசைட்டியில் யூரியாஇல்லாததால் தனியாரிடம் அதிக விலை கொடுத்து விவசாயிகள் வாங்கும் நிலை இருந்தது. இதுகுறித்த செய்தி (நவ.20) தினமலர் நாளிதழில் வெளியாகியிருந்தது.
இதையடுத்து நேற்று காலை உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் வேளாண் உதவி இயக்குனர் பரமேஸ்வரன் தலைமையில் வேளாண் அலுவலர் மீனா, உதவி அலுவலர் முத்துமணிகண்டன் உட்பட அதிகாரிகள் விக்கிரமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்தனர். 200 மூடை யூரியா வரவழைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அப்பகுதி விவசாயிகள் தினமலர் நாளிதழ் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

