*தினமலர் செய்தி எதிரொலி: கிராமங்களுக்கு குடிநீர் வழங்கல்
*தினமலர் செய்தி எதிரொலி: கிராமங்களுக்கு குடிநீர் வழங்கல்
PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே மேலச்சாக்குளம், மேலமானாங்கரை கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலச்சாக்குளம், மேலமானாங்கரை கிராமங்களில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் வசதியின்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். டிராக்டருக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் அத்தியாவசிய வேலைக்கும், விவசாய வேலைக்கும் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு மேலச்சாக்குளம், மேலமானாங்கரை கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
