/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
'தினமலர்' செய்தி எதிரொலி வாலாஜா சாலை நிழற்குடை சீரமைப்பு
/
'தினமலர்' செய்தி எதிரொலி வாலாஜா சாலை நிழற்குடை சீரமைப்பு
'தினமலர்' செய்தி எதிரொலி வாலாஜா சாலை நிழற்குடை சீரமைப்பு
'தினமலர்' செய்தி எதிரொலி வாலாஜா சாலை நிழற்குடை சீரமைப்பு
PUBLISHED ON : பிப் 19, 2025 12:00 AM

ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பீமாரெட்டியூர் மற்றும் செங்கட்டானுர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சோளிங்கரில் இருந்து, வாலாஜாபேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து இணைப்பு சாலை உள்ளது.
செங்கட்டானுார், பைவலசா, கட்டாரிகுப்பம், கிருஷ்ணாகுப்பம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த கூட்டு சாலையில் இருந்து, வேலுார், வாலாஜாபேட்டை, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த கூட்டு சாலையில், பயணியரின் வசதிக்காக நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. சில மாதங்களாக இந்த நிழற்குடை உரிய பராமரிப்பு இன்றி புதர் மண்டிக் கிடந்தது.
இதனால் பயணியர், ஆபத்தான் நிலையில் சாலையோரம் காத்திருந்து பயணித்து வந்தனர்.
இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, பராமரிப்பின்றி இருந்த நிழற்குடை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. பயணியர் தற்போது நிழற்குடையை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

