PUBLISHED ON : டிச 23, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அய்யப்பன்தாங்கல்:அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோவில் தெருவில், மின் மயானம் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, மின் மயானம் அருகே சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான காலி மனையில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ‛பெஞ்சல்' புயல் தாக்கத்தால் பெய்த மழையால், மயானத்தில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், மின் மயானத்தை பயன்படுத்த முடியாததால் பூட்டப்பட்டது.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அங்கு குவிக்கப்பட்ட குப்பை, 10க்கும் மேற்பட்ட லாரிகள் வாயிலாக, பெருங்குடி குப்பைக் கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது.
கடந்த நான்கு நாட்களில் 3,000 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டதாக, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.