/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
அரசு பஸ்களில் டிக்கெட் பில்லிங் மிஷின் சார்ஜ் செய்ய வசதி தினமலர் செய்தி எதிரொலி
/
அரசு பஸ்களில் டிக்கெட் பில்லிங் மிஷின் சார்ஜ் செய்ய வசதி தினமலர் செய்தி எதிரொலி
அரசு பஸ்களில் டிக்கெட் பில்லிங் மிஷின் சார்ஜ் செய்ய வசதி தினமலர் செய்தி எதிரொலி
அரசு பஸ்களில் டிக்கெட் பில்லிங் மிஷின் சார்ஜ் செய்ய வசதி தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : நவ 16, 2024 12:00 AM

திருப்புவனம்:தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் புதிய பில்லிங் மிஷினுக்கு சார்ஜ் போடும் வசதி இல்லாததால் கண்டக்டர்கள் சிரமப்படுவதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து சார்ஜ் செய்யும் வசதி பொருத்தப்பட்டுள்ளது.
அரசு பஸ்களில் டிக்கெட் தர வழங்கப்பட்ட பழைய பில்லிங் மிஷின் எடை அதிகமாகவும் கையாள்வதற்கு சிரமமாக இருந்ததால் அதனை மாற்றி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய பில்லிங் மிஷின் வழங்கப்பட்டன. ஆனால் இதில் சார்ஜ் எளிதில் குறைந்து விடுவதால் பஸ்கள் நிற்குமிடத்தில் கண்டக்டர்கள் சார்ஜர், பில்லிங் மிஷினை துாக்கி கொண்டு ஓட வேண்டியுள்ளது.
கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி கிளை கோட்டம் சார்பாக சிவகங்கை, திருப்புத்துார், பரமக்குடி உள்ளிட்ட 11 பணிமனைகளில் இருந்து கோவை, கம்பம், தேனி, திருப்பூர், திருச்செந்துார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் பணியாற்றும் 400க்கும் மேற்பட்ட கண்டக்டர்களுக்கு இம்மிஷின் வழங்கப்பட்டுள்ளது.
இம்மிஷினை ஸ்டேட் வங்கி வழங்கியுள்ளது. தினசரி ஒரு மிஷினுக்கு 12 ரூபாய் வாடகையை வங்கிக்கு போக்குவரத்து கழகங்கள் செலுத்த வேண்டும்.
பஸ்களில் சார்ஜ் போடும் வசதி ஏற்படுத்தி தந்தால் வசதியாக இருக்கும் என கண்டக்டர்களின் கோரிக்கை குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக பஸ்களில் சார்ஜ் போடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டிரைவர் இருக்கைக்கு எதிரே இரண்டு பிளக் பாயின்ட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது.