/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கோத்தகிரி அருகே நடைபாதை சீரமைப்பு: கிராம மக்கள் நிம்மதி.. தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : மார் 29, 2025 12:00 AM

கோத்தகிரி; கோத்தகிரி அருகே, மேல் கம்பட்டி நடைபாதை சீரமைக்கப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, மேல் கம்பட்டி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர்.
மக்கள் நடந்து செல்லும், முக்கிய நடைபாதை, கடந்த பல நாட்களாக சீரமைக்கப்படாமல் இருந்தது. மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில், கழிவுநீரும் பாதையின் மேல் ஓடியதால், துர்நாற்றத்துடன் பாதையை பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் குறிப்பாக, பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மக்கள் நடந்து செல்ல ஏதுவாக, பாதை அமைத்து, கழிவுநீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நீண்ட நாள் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.