/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செங்காடு சாலை சீரமைக்க வனத்துறை அனுமதி
/
செங்காடு சாலை சீரமைக்க வனத்துறை அனுமதி
PUBLISHED ON : ஏப் 13, 2025 12:00 AM
திருப்போரூர்:செங்காடு சாலை அமைக்கும் பணி மேற்கொள்ள, வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் இள்ளலுார் சாலையில் இருந்து செல்லும் செங்காடு சாலை 3 கி.மீ., துாரம் உடையது. இச்சாலை திருப்போரூர் ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது.
இச்சாலை வழியாக மேட்டுக்குப்பம் கிராமம், ஆஞ்சநேயர் கோவில், கோமா நகர், தையூர், காயார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
இதில், 2 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட்டது; 1 கி.மீ., சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், மேம்படுத்தப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சாலை சீரமைக்கப்பட்டது.
நாளடைவில் இச்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன. மழை நேரத்தில் இச்சாலையில் குளம்போல் நீர் தேங்கியது.
சாலையில் உள்ள பள்ளங்களில், இருசக்கர வாகனங்களில் செல்வோர், இரவு நேரங்களில், பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, அடிக்கடி விபத்துகளில் சிக்கினர். வனத்துறை அனுமதி மறுப்பால், சாலை சீரமைக்க முடியாமல் இருந்து வந்தது.
இதையடுத்து திருப்போரூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 2019 - -20ல் எம்.ஏல்.ஏ., வாக இருந்த இதயவர்மன் சட்டசபையில் மானிய கோரிகையில் வலியுறுத்தினார். தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள பாலாஜியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம் தொடர்ந்து வனத்துறையிடம் முறையிட்டு வந்தது.
இது குறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று செங்காடு கிராமத்திற்கு செல்லும் சாலை சீரமைக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
-

