/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
குருவாயூர் எக்ஸ்பிரஸ் முன்பதிவு பெட்டிகள் குறைப்பு அறிவிப்பு ரத்து-- *தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஏப் 11, 2025 12:00 AM
ராஜபாளையம்:மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள் எண்ணிக்கையை குறைத்து ஸ்லீப்பர் பெட்டிகளை அதிகரித்து கொடுக்கப்பட்ட அறிவிப்பு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை- - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே 14 பெட்டிகளுடன் இயங்கி வந்தது. இதில் 9 பொதுப் பெட்டிகளும், 2 ஸ்லீப்பர் பெட்டி, 1 ஏசி உள்ளிட்டவை உள்ளன. செங்கோட்டை வழியாக புனலுார் வரை உள்ள மலை பாதையில் இழுவை திறன் குறைவால் அதிகப் பெட்டிகளை இயக்க முடியாததால் ரயில்வே நிர்வாகம் தற்போது சி.பி.சி தொழில்நுட்பத்தில் மறு சீரமைக்கப்பட்ட பெட்டிகளுடன் விபத்துகளை தவிர்க்கவும், பெட்டிகள் ஒன்றுக்கொன்று ஏறுவது தடுத்தல், தடம் புரள்வது போன்ற அம்சத்துடன் 24 பெட்டிகளுடன் இயங்கும் இயங்கும் திறன் சார்ந்த சோதனை ஓட்டத்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் 14 பெட்டிகளுடன் இயங்கி வரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகளை அதிகப்படுத்தி அறிவிப்பு வரும் என காத்திருந்த நிலையில் ஏற்கனவே இருந்த 9 பொதுப்பெட்டிகளை 5 ஆக குறைத்து அதற்கு பதில் ஸ்லீப்பர் பெட்டிகளை 2ல் இருந்து 6 ஆக மாற்றப்படும் என அறிவிப்பு வந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தென்னக ரயில்வே அறிவிப்பில் மதுரை-- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டிகள் குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.