/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதால் மகிழ்ச்சி; 'தினமலர்' செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பெரியார் நகரில் 'தினமலர்' செய்தி எதிரொலியாக, சேதமடைந்த நிலையில் இருந்த டிரான்ஸ்பார்மர் அகற்றப்பட்டு, புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
கிணத்துக்கடவு, பெரியார் நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு இருந்த டிரான்ஸ்பார்மரில், கான்கிரீட் பூச்சுகள் சேதம் அடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி இருந்தது. மேலும், டிரான்ஸ்பார்மர் மொத்தமாக கீழே விழும் நிலையில் பல மாதங்களாக அவல நிலையில் இருந்தது.
மேலும், இவ்வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வந்தார்கள். மக்கள் நலனை கருத்தில் கொண்டு இதை மாற்றக்கோரியும், மின் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், மாற்றம் செய்ய தாமதப்படுத்தி வந்தனர்.
இப்பிரச்னை குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன்பின், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பழைய டிரான்ஸ்பார்மரை அகற்றி, புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.