/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
நொய்யல் பாலத்துக்கு உடனடி 'பேட்ஜ் ஒர்க்'; 'தினமலர்' செய்தி எதிரொலி
/
நொய்யல் பாலத்துக்கு உடனடி 'பேட்ஜ் ஒர்க்'; 'தினமலர்' செய்தி எதிரொலி
நொய்யல் பாலத்துக்கு உடனடி 'பேட்ஜ் ஒர்க்'; 'தினமலர்' செய்தி எதிரொலி
நொய்யல் பாலத்துக்கு உடனடி 'பேட்ஜ் ஒர்க்'; 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

திருப்பூர்; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, நொய்யல் பாலத்தின் மீது சேதமான தார்ரோடு புதுப்பிக்கப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையில், சாமளாபுரம் அருகே நொய்யல் பாலம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தை, தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன் படுத்தி வருகின்றன. பாலத்தின் மீது அமைத்த தார்ரோடு சேதமாகி, குண்டும், குழியுமாக மாறியது.
வாகன ஓட்டிகளின் சிரமத்தை உணர்ந்து, விரைவில் சீரமைக்க வேண்டுமென, 'தினமலர்' நாளிதழில் நேற்று, படத்துடன் செய்தி வெளியாகிருந்தது. பாலத்தின் மீது தார்ரோட்டை சீரமைக்காததால், நாற்றுநடும் போராட்டம் நடக்குமென, நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்திருந்தது.
நேற்று செய்தி வெளியான நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், உடனடியாக 'பேட்ஜ் ஒர்க்' செய்யப்பட்டது. 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, தார்ரோட்டை சீரமைத்ததால், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.