PUBLISHED ON : செப் 18, 2026 06:12 PM
நரிக்குடி, செப். 17-
நரிக்குடி மணிக்கட்டியேந்தலில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் பழுது நீக்காமல் கிடப்பில் போட்டதால் குறைந்த அழுத்த மின்சாரம் சப்ளையாகி மக்கள் அவதிப்பட்டனர். தினமலர் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டதையடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நரிக்குடி மணிக்கட்டியேந்தலில் குறைந்த மின்னழுத்தம் சப்ளையானதால் தெருவிளக்கு, மின் மோட்டார்கள், வீட்டு மின்சாதனங்கள், பிரிட்ஜ், பேன் சரிவர இயங்காமல் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை சரி 6 மாதத்திற்கு முன் தனி டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான மின் விநியோகம் செய்யப்பட்டதால், மின்சாதனங்கள் சீராக இயங்கின. திடீரென அதிக மின் அழுத்தம் காரணமாக டிரான்ஸ்பார்மர் 4 மாதங்களுக்கு முன் பழுதானது, மாற்று ஏற்பாடாக வேறு ஒரு டிரான்ஸ்பார்மரில் இணைக்கப்பட்டு அக்கிராமத்திற்கு மின் சப்ளை செய்யப்பட்டது. மறுபடியும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் சாதனங்கள், மின்மோட்டார்கள் இயங்கவில்லை. குடிநீர் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது. தினமலர் நாளிதழில் உங்கள் ஊராட்சி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக புது டிரான்ஸ்பார்மர் மாற்றி அக்கிராமத்திற்கு சீரான மின் சப்ளை செய்தனர். இதையடுத்து அக்கிராமத்தினர் மகிழ்ச்சியடைந்ததுடன் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
