sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

செய்யூர் சார் - -பதிவாளர் ஆபீசில் தற்காலிகமாக குடிநீர் வசதி

/

செய்யூர் சார் - -பதிவாளர் ஆபீசில் தற்காலிகமாக குடிநீர் வசதி

செய்யூர் சார் - -பதிவாளர் ஆபீசில் தற்காலிகமாக குடிநீர் வசதி

செய்யூர் சார் - -பதிவாளர் ஆபீசில் தற்காலிகமாக குடிநீர் வசதி


PUBLISHED ON : ஏப் 26, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 26, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, செய்யூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், மக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிகமாக குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

செய்யூர் பஜார் வீதியில் மாவட்ட கிளை நுாலகம் அருகே, சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு வீடு, நிலம் வாங்குதல், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் 'செட்டில்மென்ட்' என, 50 முதல் 80 பத்திரங்கள் வரை தினமும் பதிவு செய்யப்படுகின்றன.

இதனால், தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

இங்கு குடிநீர் வசதி இல்லாததால், மதிய நேரத்தில் பத்திரப் பதிவிற்காக காத்திருப்போர் கடும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து, சமீபத்தில் நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள், சார் - பதிவாளர் அலுவலகத்தில் தற்காலிகமாக குடிநீர் வசதி ஏற்படுத்தி உள்ளனர்.

இருப்பினும், நிரந்தரமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us