/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
நம் நாளிதழ் செய்தி எதிரொலி சப் - கலெக்டர் ஆபீஸ் சுற்றுச்சுவரில் பயனுள்ள தகவல்கள் எழுதி அசத்தல்

PUBLISHED ON : பிப் 14, 2025 12:00 AM

செங்கல்பட்டு:நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரில், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் பணி தொடர்கிறது.
செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக சுற்றுச்சுவரில், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர், 'போஸ்டர்'கள் ஒட்டி அசுத்தப்படுத்தி வந்தனர்.
இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், போஸ்டர்களால் கவனம் சிதறி, விபத்துகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.
இதைத் தவிர்க்க, பொதுமக்களுக்கு தேவையான தகவல் மற்றும் தேசிய தலைவர்கள் படங்கள் ஆகியவற்றை ஓவியமாக வரைய, பொதுப்பணித் துறைக்கு அப்போதைய சப் - கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இதையடுத்து சுற்றுச்சுவரில் தேசிய தலைவர்கள் படங்கள், பொதுமக்களுக்கு தேவையான தகவல்கள் உள்ளிட்டவை எழுதப்பட்டன.
இதையடுத்து, போஸ்டர்கள் ஒட்டுவதும் நிறுத்தப்பட்டது. அதன் பின், கடந்த சில நாட்களாக, சுற்றுச்சுவரின் நுழைவாயில் பகுதிகளில் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர், மீண்டும் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, சப் - கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரில் அரசின் திட்டங்கள், பயன்கள் குறித்து, பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை எழுத, அனைத்து துறைக்கும் செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து, சமூக நலத்துறை உள்ளிட்டத் துறையினர், பொது தகவல்களை எழுதி வருகின்றனர். இதை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.