/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
நம் நாளிதழ் செய்தி எதிரொலி: வரதாபுரம் சாலை பள்ளம் சீரமைப்பு
/
நம் நாளிதழ் செய்தி எதிரொலி: வரதாபுரம் சாலை பள்ளம் சீரமைப்பு
நம் நாளிதழ் செய்தி எதிரொலி: வரதாபுரம் சாலை பள்ளம் சீரமைப்பு
நம் நாளிதழ் செய்தி எதிரொலி: வரதாபுரம் சாலை பள்ளம் சீரமைப்பு
PUBLISHED ON : நவ 10, 2024 12:00 AM

பாண்டூர்:பூண்டி ஒன்றியம் பட்டரைப்பெரும்புதுார் ஊராட்சி வரதாபுரம் ராமர் கோவில் தெருவில் சிமென்ட் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சிமென்ட் சாலையில் கழிவுநீர் சாலையின் குறுக்கே செல்ல சாலையின் கீழ் உருளை அமைக்கப்பட்டு இருந்தது.
தற்போது சிமென்ட் சாலை சேதமடைந்து, உருளை உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த சாலையில் தற்போது கல் ஒன்று போடப்பட்டு அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த கல்லும் உடைந்து விழுந்துள்ளது.
இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து அடிபடுமோ என அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் ஒன்றிய பொது நிதியில் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையை அமைத்து உடைந்த உருளையை சீரமைத்தனர்.