/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
நெல் கொள்முதல் நிலையம் செம்புலத்தில் திறப்பு
/
நெல் கொள்முதல் நிலையம் செம்புலத்தில் திறப்பு
PUBLISHED ON : ஏப் 10, 2025 12:00 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவாம்பயிர் ஊராட்சியில், புத்தளி, இருமரம், செம்புலம், உச்சிகொள்ளைமேடு, அப்பையநல்லூர், காவாம்பயிர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தற்போது, இப்பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் நவரை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.
அவ்வாறு அறுவடையான நெல்லை விற்பனை செய்ய நெல் கொள்முதல் நிலையம் இல்லாமல் இருந்தது. இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய சிரமப்பட்டு வந்தனர்.
இது குறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, செம்புலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. காவாம்பயிர் ஊராட்சி தலைவர் அஞ்சலை பங்கேற்று, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.