/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் நுழைவு ரோடு சீரமைப்பு பஸ் டிரைவர்கள் நிம்மதி

PUBLISHED ON : நவ 22, 2025 03:07 AM

பரமக்குடி: பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் உள் பகுதி மற்றும் வெளியேறும் பகுதிகளில் பள்ளம் உருவாகிய நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. பஸ் டிரைவர்கள் உட்பட அனைத்து வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் ராமநாதபுரம் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக பஸ் ஸ்டாண்ட் உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் இரண்டு அடி வரை பள்ளம் உருவாகியது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்ததுடன் பயணிகளும் பஸ்சில் தடுமாறி வந்தனர். இது குறித்து 'தினமும் ஒரு ரோடு' பகுதி உட்பட தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது.
தற்போது பள்ளம் கற்களால் நிரப்பி மூடப்பட்ட நிலையில் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் மழை பெய்யும் சூழலில், கற்கள் பெயர்ந்து விடாமல் இருக்க உடனடியாக தார் ரோடு அல்லது சிமென்ட் கலவையை பூசி சீரமைக்க வேண்டுமென டிரைவர்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.