PUBLISHED ON : மார் 28, 2026 05:57 AM

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒ.பி.கு ளத்தில் குவியலாக இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் நேற்று அகற்றினர்.
காஞ்சி புரம் ஒ.பி., குளம் கடந்த 2011ல், அண்ணா நுாற்றாண்டு விழாவையொட்டி 2.58 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட் டு குளக்கரையில் பூங்கா அமைக்கப்பட்டது.
இங்கு நடைபாதை, இருக்கைகள், நவீன மின் விளக்கு மற்றும் குளத்தை சுற்றிலும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன.
இந்த பூங்காவிற்கு தினமும் காலை, மாலை நே ரங்களில், அப்பகுதியில் வசிப்போர் நடைபயிற்சி மேற்கொள்ளவும், விடுமுறை நாட்களில் பொழுது போக்கவும் வந்து சென்றனர்.
தற்போது முறையான பராமரிப்பு இன்றி, பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதால், குளம் சீரழிந்த நிலையில் உள்ளது.
இதனால், நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது.இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் ஒ.பி., குளத்தில் குவியலாக இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை நேற்று அகற்றினர்.
