/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பயணியர் நிழற்கூரையை சூழ்ந்திருந்த புதர் அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM

நெகமம்; நெகமம், ஆண்டிபாளையம் பயணியர் நிழற்கூரை முன் இருந்த புதர்செடிகள் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக அகற்றம் செய்யப்பட்டது.
வடசித்தூர், நெகமம் வழித்தடத்தில் உள்ள ஆண்டிபாளையம் பயணியர் நிழற்கூரையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிழற்கூரை முன்பாக அதிகளவில் செடிகள் முளைத்து புதர் மண்டி இருந்தது.
மேலும், பூச்சி மற்றும் கொசு தொல்லை காரணமாக பயணியர் இந்த நிழற்கூரையை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர். இதனால் பயணியர் ரோட்டோரம் காத்திருந்து பஸ் பயணம் மேற்கொண்டனர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பயணியர் நிழற்கூரை முன்பாக இருந்த புதரை ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றி சுத்தம் செய்தனர். மக்கள் நிம்மதியடைந்தனர்.