/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த வேகத்தடை அகற்றம் * தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : அக் 04, 2024 12:00 AM

ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த வேகத்தடைகள்அகற்றப்பட்டது.
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பெருங்குளத்தில் சுங்கட்டண வசூல் மையம் அமைக்கப்பட்டது.
உள்ளூர் மக்கள் எதிர்ப்பால் இது செயல்படவில்லை. இதனால் கட்டத்தை அகற்றி விட்டனர். அதே சமயம் உயரமானவேகத்தடைகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் இரவு நேரத்தில்விபத்து அபாயம் உள்ளது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.