/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சாத்துார் சிவன் கோயில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
/
சாத்துார் சிவன் கோயில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
PUBLISHED ON : நவ 27, 2025 06:16 AM

சாத்துார்: தினமலர் செய்தி எதிரொலியாக சாத்துார் சிவன் கோயில் புரைமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோயில் மக்களால் சிவன் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது.
இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால் பக்தர்கள் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்திட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்து கோயிலின் மதில் சுவர் மற்றும் உட்புறத்தில் உள்ள சுவாமி சிலைகள் மற்றும் பிரகார மண்டபங்களை வேகமாக புனரமைத்து வருகின்றனர். பக்தர்கள் கோரிக்கையை தினமலரில் சுட்டிக்காட்டி செய்தி வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த புனரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

