PUBLISHED ON : ஏப் 17, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டியில் ஊராட்சி அலுவலகம் அருகே ரூ. 5 லட்சத்தில் போர்வெல் அமைத்து பொது குளியல் தொட்டி கட்டப்பட்டது. இப் போர்வெல் பழுதாகி 30 நாட்களுக்கு மேலாகியும் சரி செய்யாததால் மக்கள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பி.டி.ஓ.,(கி.ஊ). சங்கர் கைலாசம் ஏற்பாட்டின் பேரில் புதிய மோட்டார் இணைப்பு கொடுக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.