/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
'ஸ்வைப்பிங் மிஷின்' பழுது நீக்கம் * காசிமேடு மீனவர்கள் மகிழ்ச்சி
/
'ஸ்வைப்பிங் மிஷின்' பழுது நீக்கம் * காசிமேடு மீனவர்கள் மகிழ்ச்சி
'ஸ்வைப்பிங் மிஷின்' பழுது நீக்கம் * காசிமேடு மீனவர்கள் மகிழ்ச்சி
'ஸ்வைப்பிங் மிஷின்' பழுது நீக்கம் * காசிமேடு மீனவர்கள் மகிழ்ச்சி
PUBLISHED ON : ஏப் 28, 2025 12:00 AM

சென்னை:சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மானிய விலை டீசலுக்கு பணம் செலுத்தும், 'ஸ்வைப்பிங் மிஷின்' பழுதானதால், நிதி சுமை ஏற்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர்.
பணம் கொடுத்து டீசல் வாங்குவதால், முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்த செய்தி, கடந்த 9ம் தேதி நம் நாளிதழில் வெளியானது.
அதை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், ஏ.டி.எம்., கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தப்படும் 'ஸ்வைப்பிங் மிஷின்' மற்றும், 'ஜிபே, பே.டி.எம்' மற்றும் க்யூ.ஆர்., கோடு ஸ்கேனர் போன்றவை பழுது நீக்கப்பட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனை முறை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி கூறியதாவது:
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, பணம் செலுத்தக் கூடிய, 'ஸ்வைப்பிங் மிஷின்' பழுதாகி இருந்தது. அதனால், கையில் பணம் கொடுத்து டீசல் வாங்கும் நிலைமை நிலவியது.
தற்போது, டிஜிட்டல் பரிவர்த்தனை முறை சரி செய்யப்பட்டு, மீனவர்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அரசுக்கும், துறை அமைச்சருக்கும், மீன்வள துறை அதிகாரிகளுக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.