/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
துார்வாரப்பட்டது காளியப்பா நகர் ஓடை
/
துார்வாரப்பட்டது காளியப்பா நகர் ஓடை
PUBLISHED ON : டிச 03, 2025 05:21 AM

சிவகாசி: தினமலர் செய்தி எதிரொலியாக சிவகாசி காளியப்பா நகர் வழியாக செல்லும் ஓடை துார் வரப்பட்டது.
சிவகாசி விளாம்பட்டி ரோடு மாலையம்மன் கோயிலில் இருந்து காளியப்பா நகர் வழியாக ஓடை செல்கின்றது.
மழைக்காலங்களில் தண்ணீர் ஓடையின் வழியாக நீர் நிலைகளுக்கு செல்லும். இந்நிலையில் ஓடை முழுவதுமே கோரைப்புற்கள், சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. தவிர ஓடை முழுவதுமே பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்துள்ளது.
இதனால் மழைநீர், கழிவு நீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது.
மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறவும் வழியில்லை. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகின்றது.
ஓடையினை துார்வார வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து கமிஷனர் சரவணன், மாநகர் நல அலுவலர் ஸ்ரீதேவி சுகாதார அலுவலர்கள் சுரேஷ் திருப்பதி தலைமையில் ஓடையில் ஆக்கிரமித்து இருந்த கோரைப்புற்கள் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு துார்வாரப்பட்டது.
இதனால் மழைநீர் எளிதாக நீர்நிலைகளுக்கு சென்றதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

