/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே மரங்கள் வெட்டி அகற்றம்: தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஆக 13, 2025 12:00 AM

கோத்தகிரி; கோத்தகிரி அண்ணா பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஊட்டி, குன்னுார் உட்பட, கிராமப்புறங்கள் மற்றும் சமவெளி பகுதிகளுக்கு, 55 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர, மினி பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் அதிக அளவில் பயணிகள், பள்ளி மாணவர்கள் பஸ்சில் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கின்றனர். இந்த பஸ் ஸ்டாண்ட் மேற்பகுதியில், அபாயகரமான கற்பூர மரங்கள் நிறைந்திருந்தன.
போதிய வேர் பிடிப்பு இல்லாத மரங்கள், மழையுடன், காற்று வீசும்போது, விழும் நிலையில் இருந்தன. இதனால், பயணிகள் அச்சத்திற்கு இடையே பஸ் இருக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், 'அசம்பாவிதம் நடப்பதற்கும் மரங்களை அகற்ற வேண்டும்,' என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, நேற்று அபாய மரங்கள் அகற்றப்பட்டன. இதனால், பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.