தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கோஷ்டி மோதலால் ரத்தான நயினார் நாகேந்திரன் பிரசாரம்!

 கோஷ்டி மோதலால் ரத்தான நயினார் நாகேந்திரன் பிரசாரம்!

 கோஷ்டி மோதலால் ரத்தான நயினார் நாகேந்திரன் பிரசாரம்!


PUBLISHED ON : டிச 01, 2025 12:52 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 01, 2025 12:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''தகாத உறவு தகராறு கள் தொடர் கதையா போறது ஓய்...'' என்ற படியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்த இளம்பெண்ணுடன், போலீஸ் ஏட்டு ஒருத்தர் நெருக்கமாகிட்டார்... போன மாசம் நடுராத்திரி, அந்த பெண் வீட்டுக்கு ஏட்டு போய், 'தனிமை யில்' இருந்திருக்கார் ஓய்.. .

''பக்கத்துல இருந்த அந்த பெண்ணின் உறவினர்கள் திரண்டு வரவே, ஏட்டு தப்பி ஓடிட்டார்... ஏட்டுவை ஆயுதப்படைக்கு மாத்திய, எஸ்.பி., அப்புறமா, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டார் ஓய்...

''இதே போல, விருதுநகர் டி.எஸ்.பி., ஆபீஸ் ஏட்டு ஒருத்தருக்கும், ஊரக போலீஸ் ஸ்டேஷன் பெண் ஏட்டுக்கும், 'பழக்கம்' ஏற்பட்டு, அப்புறமா பிரிஞ்சிட்டா... இதுல, ரெண்டு பேருக்கும் இடையில பெரிய தகராறு ஆகி, கடைசியில ரெண்டு பேரையுமே, எஸ்.பி., சஸ்பெண்ட் பண்ணிட்டார் ஓய்...

''இந்த மாதிரி, மாசத்துக்கு ஒரு சம்பவமாவது நடக்கறது... இதனால, அந்த மாவட்ட எஸ்.பி., கண்ணனுக்கு பெரிய தலைவலியா போயிடுறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''சீட்டுக்கு முட்டி மோதுதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''சேலம் மாவட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்... சேலம் கிழக்கு மாவட்ட, பா.ஜ., பொதுச்செயலரா இருக்காரு வே...

''அதோட, வீரபாண்டி சட்டசபை தொகுதி அமைப்பாளர், ஓட்டுச்சாவடி முகவர் பொறுப்பு கள்லயும் இருக்காரு... வர்ற தேர்தல்ல, அ.தி.மு.க., கூட்டணியில், வீரபாண்டி தொகுதியில் நிற்க திட்டமிட்டிருக்காரு வே...

''இதுக்காக தீபாவளி, பொங்கல், பிரதமர் மோடி பிறந்த நாள்னு, தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வாரி வழங்குதாரு... கட்சி நிர்வாகி களையும் நல்லாவே கவனிக்காரு வே...

''இவருக்கு போட்டியா, கிழக்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் சண்முகநாதனும், வீரபாண்டி தொகுதிக்கு குறி வச்சிருக்காரு... ஏன்னா, சேலம் கிழக்கு மாவட்டத்துல வர்ற நாலு சட்டசபை தொகுதிகள்ல, வீரபாண்டி மட்டும் தான் பொது தொகுதியா இருக்கு வே. ..

''மற்ற மூணுமே தனி தொகுதிகள்... அதனால, இந்த ஒரு தொகுதிக்கு ரெண்டு பேரும் முட்டி மோதுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''கோஷ்டி மோதலால, பிரசாரத்தையே ரத்து பண்ணிட்டாரு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் மாவட்ட வாரியா பிரசா ரத்துல ஈடுபட்டிருக்கார்... போன வாரம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தாரு பா...

''ஆனா, 'திருச்செந்துார்ல பிரசாரம் செய்யணும்'னு, அந்த தொகுதியில நிற்க விரும்பும் மாவட்ட நிர்வாகி ராதாகிருஷ்ணன், நயினாரிடம் வலியுறுத்தியிருக்கார்... ஆனா, ஸ்ரீவைகுண்டம் தொகுதி யில் போட்டியிட திட்டமிட்டிருக்கும், மாவட்ட பா.ஜ., தலைவர் சித்ராங்கதன், 'என் தொகு தி யில் தான் பிரசாரம்'னு அடம் பிடிக்க, வெறுத்து போன நயினார் தன் சுற்றுப்பயணத்தையே ரத்து பண்ணிட்டாரு பா...

''ஆனாலும், 'மழை காரணமா சுற்றுப்பயணம் ரத்து'ன்னு அறிவிச்சிட்டார்... 'அடுத்த பிரசாரம் திருச்செந்துாரா, ஸ்ரீவைகுண்டமா'ன்னு அந்த கட்சியினர் பட்டிமன்றம் நடத்திட்டு இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பி னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us