sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : அக் 08, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 08, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்: நிர்மலா சீதாராமன், கடந்த 15 நாட்களுக்கு முன் தமிழகம் வந்தபோது, 'மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நாங்கள் ஏன் பணம் தரவேண்டும்; அது, தமிழக அரசு சுயநிதியில் செய்து கொள்வதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்றார். கடந்த வாரம், ஸ்டாலின் டில்லி சென்றார். பெரிய அய்யாவை பார்த்து கும்பிடு போட்டார்; 45 நிமிடம் பேசினார். இப்போது, 'மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு, 65 சதவீதம் நிதியைதரும்' என, நிர்மலா சீதாராமன் அறிக்கை விடுகிறார். பா.ஜ., - தி.மு.க., இடையே நேரடி உறவு உள்ளது. தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல்விழித்துக் கொண்டிருக்கின்றன.

டவுட் தனபாலு: தி.மு.க.,வை திட்டுற சாக்குல, உங்க கூட்டணி தலைமையான பா.ஜ.,வையும் வாரிட்டீங்களே... அதனால, தேசிய ஜனநாயக கூட்டணியில இனி உங்களுக்கு இடம் இருக்குமா என்பது, 'டவுட்'தான்!



பத்திரிகை செய்தி: சென்னைமாநகராட்சியின் 144வது வார்டு தி.மு.க., செயலர் மற்றும் கவுன்சிலர் ஸ்டாலின், ஒப்பந்ததாரரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை அடுத்து, ஸ்டாலினை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி, பொதுச்செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

டவுட் தனபாலு: காதும் காதும்வச்ச மாதிரி காரியத்தை முடிக்காம,இந்த மாதிரி பகிரங்கமா மிரட்டல்லஈடுபடலாமா... அதுலயும் இவர், கட்சி தலைவரின் பெயரை வேற வச்சுக்கிட்டு இப்படி அடாவடிபண்ணி, தலைமைக்கும் சேர்த்துகெட்ட பெயரை ஏற்படுத்திட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!



த.மா.கா., தலைவர் வாசன்:தமிழக அமைச்சரவையில் மாற்றம்இருந்தாலும், ஆட்சியாளர்களின் செயல்பாட்டில் மாற்றம் இருக்காது. மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாக இருந்தால்,மதுக்கடைகளை உடனேமூடலாம். எப்படி இருந்தாலும் சட்டசபை தேர்தலுக்குள் மதுக்கடைகளை மூடக்கூடிய உறுதியான முடிவை எடுக்க வேண்டும்.

டவுட் தனபாலு: மக்கள் நலனில்அக்கறை உள்ள அரசாக இருந்தால்,மதுக்கடைகளை மூடலாம்னு சொல்றீங்களே... பட்டுன்னு கடைகளை இழுத்து மூடிட்டா, குடிச்சே பழக்கப்பட்டவங்க நலன்களை யார் கவனிப்பதாம்... அவங்க நலன் கருதியே, மதுக்கடைகளை மூடுவதற்குஅரசு தயங்குது என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!








      Dinamalar
      Follow us