sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் தப்பிவிடக்கூடாது என தற்போதைய சென்னை கமிஷனர் அருணை சந்தித்து வலியுறுத்தினேன். தொடர்ந்து, முதல்வரை சந்தித்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு புலன் விசாரணையை நேர்மையாக நடத்த, அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வலியுறுத்தினேன். ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக ஈடுபட்ட குற்றவாளி மீது போலீஸ் என்கவுன்டர் நடவடிக்கை எடுத்திருப்பது, அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், ஆறுதல் அளிக்கிறது.

டவுட் தனபாலு: பொதுவாகவே, போலீசாரின் என்கவுன்டர்களை, 'செட்டப்' என்று தான் பலரும் சொல்வாங்க... அதுலயும் நீங்க முதல்வரையும், சென்னை கமிஷனரையும் பார்த்துட்டு வந்த பிறகு இந்த என்கவுன்டர் நடந்திருப்பது, அந்த புகார்களை உறுதிப்படுத்துகிறது என்பதில், 'டவுட்'டே இல்லை!



பத்திரிகை செய்தி: 'சண்டாளர்' என்ற ஜாதி பெயரை பயன்படுத்த, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தடை விதித்துள்ளது. மீறி பயன்படுத்துவோர் மீது, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

டவுட் தனபாலு: 'சண்டாளர்' என்பது ஜாதி பெயர் என்றால், இதுவரை அதை பயன்படுத்தி வந்த சினிமா பாடல்கள், அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் வெளியானப்ப, ஆணையம் எங்க போயிருந்தது...? இப்ப, சீமான் தரப்பு இந்த பெயரை பயன்படுத்தி, முன்னாள் முதல்வரை விமர்சித்த பின்தான், ஆணையத்தின் துாக்கம் கலைந்ததா என்ற, 'டவுட்' வருதே!



தமிழக முதல்வர் ஸ்டாலின்: காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவின்படி, 1 டி.எம்.சி., நீரை விடுவிக்காத கர்நாடக அரசின் செயல், உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும். கர்நாடகாவின் நான்கு முக்கிய அணைகளின் நீர் இருப்பு, 75 டி.எம்.சி.,யாகும். மேட்டூர் அணையில் வெறும் 14 டி.எம்.சி., அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், நீர் வழங்க முடியாது என, கர்நாடக அரசு கூறுவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

டவுட் தனபாலு: 'மத்தியில் தான் பா.ஜ., அரசு இருக்குது, மாநிலத்தை வஞ்சிக்குது' என்ற உங்க கருத்தைக் கூட ஏத்துக்கலாம்... ஆனா, கர்நாடகாவில் உங்க கூட்டணி கட்சியான காங்கிரஸ் தானே ஆட்சியில் உள்ளது... சோனியா, ராகுலுக்கு ஒரு போன் அடிச்சு, பிரச்னையை தீர்க்காதது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us