sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 20, 2026 ,பங்குனி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஹாரில் செயல்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின்மூத்த தலைவர் லாலு பிரசாத்: 'ஜாதிவாரி கணக்கெடுப்பைநடத்த மாட்டோம்' என்று ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,சொல்வதற்கு என்ன அதிகாரம்இருக்கிறது. அவர்களின் காதை பிடித்து உட்கார வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர்ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

டவுட் தனபாலு: அது சரி... 'கணக்கெடுப்பை நடத்துவோம்'னு சொல்றதுக்கு நீங்களும் கூட தான், ஆட்சி, அதிகாரத்தில் இல்லை... அதுபோகட்டும்... பீஹார்ல நீங்களும்,உங்க மனைவியும் பல வருஷங்களா முதல்வராக இருந்தப்பவே, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடாததுஏன் என்ற, 'டவுட்' வருதே!





பத்திரிகை செய்தி: நடிகர் விஜய் நடித்துள்ள, கோட் படம் இன்று வெளியாகிறது. இதற்கு பேனர்கள் வைப்பதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தினருக்குஅமைச்சர்களின் வாய்மொழி உத்தரவின் அடிப்படையில்,போலீசார் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுவதாகபுகார் எழுந்துள்ளது.

டவுட் தனபாலு: எப்பேர்ப்பட்ட மக்கள் செல்வாக்குடன் இருந்தஎம்.ஜி.ஆர்., படங்களுக்கே ஏகப்பட்ட இடையூறுகளைஏற்படுத்திய தி.மு.க.,வினர், முந்தா நாள் கட்சி துவங்கிய விஜய்யை விட்டு வைப்பாங்களா என்ன...? இதை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதில் தான், அவரது அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: மேகதாதுவில் அணை கட்டுவதுகுறித்து, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் இங்கு வந்து பேசுகிறார்; அவருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் கூற வேண்டும். அவர், துணை முதல்வர் பதவி கிடைக்காத கோபத்தில், சிங்கப்பூர்சென்று விட்டார். முதல்வர் இல்லை; மூத்த அமைச்சர் இல்லை; தமிழகத்தில் காபந்து அரசு நடக்கிறது. 'அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்' என, சொல்வதற்கு கூட ஆள் இல்லை.

டவுட் தனபாலு: தமிழகத்தை பல வருஷங்களா ஆட்சி செய்த உங்க கட்சிக்கு பதில் தரும் உரிமை இல்லையா... பொறுப்பான எதிர்க்கட்சி என்றமுறையில், 'மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம்'னு கர்நாடகாவுக்கு பதில் தரவிடாம, உங்களை யார் தடுத்தது என்ற, 'டவுட்' எழுதே!








      Dinamalar
      Follow us