PUBLISHED ON : செப் 12, 2024 12:00 AM

அமெரிக்காவில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர்ராகுல்: இந்தியாவில், தற்போதுசண்டை நடந்து வருகிறது; இது, அரசியலுக்காக நடக்கவில்லை. இதோ இங்கே தலைப்பாகை அணிந்து அமர்ந்திருக்கிறாரே, இவரை போன்ற சீக்கியர்கள், இந்தியாவில்இனி தலைப்பாகை அணிந்து கொள்ள முடியுமா, 'கடா' எனப்படும், கைகளில் காப்பு வளையம் அணிய முடியுமா என்பதற்கான சண்டை நடக்கிறது. அவர்களால்,குருத் வாராவுக்கு இனி செல்ல முடியுமா என்ற சண்டை நடக்கிறது.
டவுட் தனபாலு: சீக்கியர்கள்மீதான உங்க பாசம் புல்லரிக்கவைக்குது... உங்க பாட்டி, 1984ல் சீக்கிய பாதுகாவலர்களால்கொல்லப்பட்டப்ப, டில்லியில் 3,000க்கும் மேற்பட்ட சீக்கியர்களை உங்க கட்சியினர் கொன்றுகுவிச்சாங்களே... அப்ப, பலர் உயிர் பிழைக்க தங்களது தலைப்பாகை, நீண்ட தலைமுடியை வெட்டி எறிஞ்ச கண்ணீர்கதைகள் உங்க காதுக்கு வரலையோ என்ற, 'டவுட்' தான் வருது!
பத்திரிகை செய்தி: அ.தி.மு.க.,வில் மாவட்டச் செயலர்கள் மீது, பல்வேறு புகார்கள் எழுந்த நிலையிலும், அவர்களை மாற்ற விரும்பாத பழனிசாமி,அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த, அவர்களுக்குபதவிகள் வழங்க திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
டவுட் தனபாலு: ஜெ., காலத்துல, மாவட்டச் செயலர் மீது புகார் கூறியவருக்கே அந்த பதவியை மாற்றி குடுத்துட்டு, மாவட்டச் செயலரை தடாலடியா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க... அந்த துணிச்சல் இல்லாம தான், அனைவருக்கும் பதவி என்ற, 'துக்ளக் தர்பார்' முடிவுக்கு பழனிசாமி வந்துட்டாரோ என்ற, 'டவுட்' வருது!
பத்திரிகை செய்தி: நடிகர் சரத்குமார், தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை, பா.ஜ.,வில் இணைத்தார். நடிகர்கள் செந்தில், ராதாரவி, நடிகை நமீதா, இசை அமைப்பாளர் கங்கை அமரன் என, பல சினிமா பிரபலங்கள்பா.ஜ.,வில் உள்ளனர். ஆனால், இவர்கள் கட்சியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்ற அதிருப்தியில்உள்ளனர். இவர்களுக்கு நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
டவுட் தனபாலு: விஜய் கட்சியில்சேர நிஜமாகவே இவ்வளவு பேர் ஆர்வமா இருக்காங்களா என்ன... ஒருவேளை, கட்சிக்குமவுசை அதிகரிக்க, நம் வெற்றிக் கழக நிர்வாகிகள்இப்படி தகவல்களை பரப்புறாங்களோ என்ற, 'டவுட்'தான் எழுது!

