sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 07, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 07, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி:டில்லி, ஹரியானாவுக்கு அடுத்து தமிழகத்தில் தான் அதிக சி.பி.எஸ்.இ., பள்ளிகள்உள்ளன. மத்திய அரசின் கல்விக் கொள்கையை, தி.மு.க.,வினரும், முதல்வரின் குடும்பத்தினரும் பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன? தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இருந்து, மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற, ஒரு நொடி போதுமே... அதற்கு முதல்வர் உத்தரவிடுவாரா?

டவுட் தனபாலு: மாநில அரசின் பாடத்திட்டத்துக்கு பள்ளிகளை மாத்திட்டா, அவங்களிடம்படிக்கிறதுக்கு பதிலாக, அரசு பள்ளிகள்லயே படிச்சிடலாம்னு மாணவர்கள் கிளம்பிட மாட்டாங்களா...? தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளை இழுத்து மூட யோசனை கொடுக்குறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!





ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, டில்லி முன்னாள் முதல்வர் ஆதிஷி: டில்லி சட்டசபை தேர்தலில் வென்றால், அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே, மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய் வழங்கும்திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதாக பா.ஜ., வாக்குறுதிஅளித்தது. ஆனால், அமைச்சரவை கூட்டம் நடந்து, 10 நாட்களாகியும் இத்திட்டத்தை அமல்படுத்தவில்லை.

டவுட் தனபாலு: உங்க, 'இண்டியா' கூட்டணியில் அங்கம்வகிக்கும் தி.மு.க., தமிழகத்தில்அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை, நாலு வருஷமா நிறைவேற்றவே இல்லை... ஆனா, பா.ஜ., அரசு மட்டும் பத்தே நாள்ல வாக்குறுதிகளை நிறைவேற்றணும்னு நீங்க எதிர்பார்ப்பது எல்லாம் பேராசை என்பதில், 'டவுட்'டே இல்லை!





த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: காமராஜர் பெயருக்கும், புகழுக்கும், மேலும் பெருமை சேர்க்கும் விதமான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக, திருத்தணி நகராட்சி, ம.பொ.சி., சாலையில் காமராஜர் பெயரில்,ஒரு காய்கறி சந்தை உள்ளது.தற்போது, இந்த சந்தை சீரமைக்கப்பட்டு, திறப்பு விழா நடக்கும்போது, 'கலைஞர் நுாற்றாண்டு சந்தை' என பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது; இதைத் தவிர்க்க வேண்டும்.

டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரசின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகையே, 'தமிழகத்தில நடக்கும் தி.மு.க., ஆட்சியே காமராஜர் ஆட்சிதான்'னு ஆணித்தரமா சொல்லிட்டாரே... அந்த தைரியத்துல தான், காமராஜர் பெயரை மாத்திட்டு, கருணாநிதி பெயரை சூட்டுறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us