தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ சிந்தித்து செயல்படுங்கள் முதல்வரே!

 சிந்தித்து செயல்படுங்கள் முதல்வரே!

 சிந்தித்து செயல்படுங்கள் முதல்வரே!

1


PUBLISHED ON : ஆக 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருது நகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மக்கள்தொகை அடிப்படை யில், தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மோடி அரசு கொண்டுவரும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்ப்பது என்ற கொள்கையை வைத்துள்ள, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சியினரும், இதையும் எதிர்த்து வருகின்றனர்.

நாட்டில் மக்கள்தொகை அதிகரிக்கும்போது, பார்லிமென்டின் லோக்சபாவிலும், மாநிலங்களின் சட்டசபைகளிலும், உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள, அரசியலமைப்பின், 81, 170 ஆகிய சட்டப்பிரிவுகள் இடமளிக்கின்றன.

கடந்த 1952-ல் நம் நாட்டின் மக்கள் தொகை, 3௭.௨ கோடியாக இருந்தபோது, பார்லிமென்ட் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 494-; அதுவே, 1963-ல், 43.9 கோடியாக உயர்ந்த போது, உறுப்பினர்களின் எண்ணிக்கை, 52௦- ஆக உயர்த்தப்பட்டது; 1973-ல் மக்கள் தொகை, 54.7 கோடியாக அதிகரித்தபோது, உறுப்பினர்களின் எண்ணிக்கை, 543- ஆக உயர்த்தப்பட்டது.

இன்று தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கும் காங்கிரஸ் ஆட்சியில்தான், இத்தனையும் நடந்துள்ளன.

கடந்த 2003-ல் மேற்கொள்ளப்பட்ட, 91-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், பார்லிமென்டிலும், சட்டசபைகளிலும், மொத்தம் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சமாக, 15 சதவீதம் பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் தமிழகத்தில், 35 பேரும், மத்திய அரசில், 81 பேரும் அமைச்சராக பொறுப்பேற்கலாம்.

இச்சட்ட திருத்தம் அமலுக்கு வந்து, 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதாலும், மக்கள் தொகை அதிகரித்திருப்பதாலும், தொகுதி மறுசீரமைப்பு அவசியமாகிறது.

இத்திட்டம் நிறைவேறினால் பார்லிமென்ட் உறுப்பினர் எண்ணிக்கை, 534-லிருந்து 800க்கு மேலேயும், தமிழக எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 59 ஆகவும், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 350 ஆகவும் உயர வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் மொத்தம், 38 மாவட்டங்கள் தான் உள்ளன. ஆனால், தங்களது கட்சியை வளர்ப்பதற்காக, மாவட்டங்களை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என தி.மு.க., 75 மாவட்டங்களாகவும், அ.தி.மு.க., 82 மாவட்டங்களாகவும் பிரித்து நிர்வாகிகளை நியமித்திருக்கின்றன.

ஆனால், நாட்டு நலன் கருதி தொகுதியை மறுசீரமைக்க, மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் மட்டும் எதிர்ப்பராம்!

கடந்த 1951-ல், மூன்று கோடியாக இருந்த தமிழகத்தின் ஜனத்தொகை, 2026ல், 7.78 கோடியாக உயர்ந்திருக்கும்போது, பார்லிமென்டின் பிரதிநிதித்துவம் கூடுமேயன்றி குறைவதற்கு வாய்ப்பில்லை. 'இத்திட்டத்தினால், எந்த ஒரு மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்திய பின்பும், இதை அரசியலாக்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர் எதிர்க்கட்சியினர்!

முதல்வர் விஜயும், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு முடிவெடுக்காமல், சாதக, பாதகங்கள் குறித்து, சிந்தித்து செயல் படுவது நல்லது!

------

பெயர் மாற்றத்தால் என்ன நிகழ்ந்து விடப் போகிறது?


டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது, 'ஆந்திராவில், ஆந்திர உயர் நீதிமன்றம் என்றும் கேரளாவில், கேரள உயர்நீதிமன்றம் என்றும் மாநிலத்தின் பெயரே உயர் நீதிமன்றங்களுக்கு உள்ளன.

'அதேபோல் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை, 'தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளார், அ.தி.மு.க., முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

சட்டசபைக்கு புதிதாக சென்றிருக்கும், எம்.எல்.ஏ., எவராவது இக்கோரிக்கையை வைத்திருந்தால், ஏதோ ஆர்வ கோளாரால் பேசுகிறார் என்று நினைக்கலாம்.

ஆனால், 10 ஆண்டுகள் சட்டத்துறை அமைச்சராக இருந்த சண்முகம், இக்கோரிக்கையை வைப்பது தான் வேடிக்கையாக உள்ளது.

இந்தியாவில் நான்கு மாநில நீதிமன்றங்கள் மட்டும் தான் தனி அதிகாரம் கொண்ட, 'சாட்டர்ட்' உயர் நீதிமன்றங்கள்!

மெட்ராஸ் உயர் நீதிமன்றம், பாம்பே, கல்கத்தா மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றங்கள் மட்டும் தான், கடல் வழி பிரச்னைகளுக்கு தீர்வு தரும்.

கொல்கத்தா என மாநிலத்தின் பெயர் மாறினாலும், 'கல்கத்தா உயர் நீதிமன்றம்' என்ற பெயர் அப்படியே உள்ளது. அதேபோல், மும்பை என மாநிலத்தின் பெயர் மாறினாலும், 'பாம்பே உயர் நீதிமன்றம்' பெயர் அப்படியே உள்ளது.

நீதிமன்ற பெயரை மாற்ற முடியுமானால், மெட்ராஸ் எனும் மாநிலத்தின் பெயரை, 'தமிழ்நாடு' என்று மாற்றிய அண்ணாதுரை, அப்போதே மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரையும், 'தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' என மாற்றி இருப்பார்!

அது முடியாது என்று தெரிந்து தான், அவர் அந்த பிரச்னைக்கே போகவில்லை.

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்ற, முதலில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில், ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில் தீர்மானங்கள் நிறைவேற வேண்டும். இந்த தீர்மானங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து, அவர் ஒப்புதல் வழங்கினால் தான் பெயரை மாற்ற முடியும்.

எனவே, மக்களுக்கு எந்த பலனும் தராத, இந்த பெயர் மாற்ற கோரிக்கையை கைவிட்டு, ஓட்டு போட்ட தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, அதுகுறித்து சட்டசபையில் சண்முகம் பேச வேண்டும்!

---------

வாரம் முழுதும் இயக்க வேண்டும்!




பா.பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை, புதுச்சேரியில் இருந்து எழுதுகிறார்: இன்றைய இளம் தலைமுறையினரிடம் புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்து விட்டது. அதை ஊக்குவிக்கும் விதமாகத் தான், ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.

அவ்வகையில், 'தினமலர்' நாளிதழ் ஏற்பாடு செய்துள்ள, 'கடல் தாமரை' புத்தக பூங்கா, வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயங்கி, நாலாபுறமும் நறுமணம் வீசுகிறது.

கல்வி நிலையங்களில் உள்ள நுாலகம் மாணவர்களுக்கு மட்டுமே பயன்படும்; ஆனால், மாநில அரசால் நிர்வகிக்கப்படும் பொது நுாலகங்கள், பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும்.

இந்நிலையில், தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள பட்ஜெட்டில், பொது நுாலகங்கள், 10 கோடி ரூபாயில் டிஜிட்டல் நுாலகங்களாக மாற்றப்படும் எனும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை புதுச்சேரி அரசும் செய்ய வேண்டும்; தவிர, பொது நுாலகங்களின் பயன் பொதுமக்களுக்கு பூரணமாக கிடைக்க வேண்டுமெனில், நுாலகங்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் முழுமையாக இயங்க வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us