தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 11, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு: தமிழகத்தில் பெண்களுக்கான ஆட்சி நடக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், பெரும்பாலான திட்டங்கள் மகளிருக்காக உருவாக்கப்பட்டன. அவை வெற்றிகரமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இது குறித்து எதுவுமே தெரிந்து கொள்ளாமல், தமிழக அரசியலின் புது வரவான த.வெ.க., தலைவர் விஜய், விளம்பர வெளிச்சத்துக்காக குறை கூறி வருகிறார்.

டவுட் தனபாலு: பெண்களுக்காக நிறைய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திட்டு வர்றதா சொல்றீங்களே... ஒட்டுமொத்த தமிழக பெண்களும் எதிர்பார்ப்பது, பூரண மதுவிலக்கு தான்... பெண்களுக்கான ஆட்சியை நீங்க நடத்துவது உண்மை என்றால், அதை முதலில் செய்து காட்டுங்க... 'டவுட்'டே இல்லாம, முதல் ஆளாக விஜய் உங்களை பாராட்டுவார்!

  

வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன்: தற்போது கட்சி துவங்கினாலே, யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன. இப்போதே, 20 சதவீதம், 24 சதவீதம் ஓட்டு பெற முடியும். அடுத்த முதல்வர் இவர் தான் என வலிந்து பூதாகரப்படுத்துகின்றனர். இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. ஓட்டு சதவீதம் எவ்வளவு என யாருக்கும் தெரியாது. ஆனாலும், சமூகம் எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

டவுட் தனபாலு: நீங்க, நடிகர் விஜயைத் தான் சொல்றீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது... நீங்க மாறி மாறி கூட்டணி அமைக்கிற திராவிடக் கட்சிகளின் அரை நுாற்றாண்டு ஆட்சியில், தமிழக மக்கள் வெறுத்து போயிருக்காங்க... அதனால தான், விஜய் கட்சிக்கு இவ்வளவு வரவேற்பு என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

  

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: பெண் கல்வியை முன்னெடுத் தது, ஈ.வெ.ரா.,வும், சுயமரியாதை இயக்கமும் தான். முதல்வராக இருந்த கருணாநிதி, பெண்களுக்கு உள்ளாட்சி யில் 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினார். இப்போது, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்குகிறோம்.

டவுட் தனபாலு: உள்ளாட்சிகளில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குறீங்க என்பதில் எந்தவித, 'டவுட்'டும் இல்லை... ஆனா, அவற்றில் எத்தனை சதவீதம் இடங்களில் தந்தை, கணவர், அண்ணன், தம்பின்னு தங்களது குடும்ப ஆண்கள் தலையீடு இல்லாம பெண்கள் சுதந்திரமா இயங்குறாங்க என்பதை, 'டவுட்' இல்லாம சொல்ல முடியுமா?

  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us